இதுவும் அரசியல் ஸ்க்ரிப்ட் தான்.. விஜய்யின் படத்தை இயக்கும் எச்.வினோத்

 
H.Vinoth - Vijay

விஜய்யின் தளபதி 70 படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து விஜய்யின் தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாராப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விஜய்யின் 70வது படத்தை ஷங்கர் இயக்கலாம் என செய்திகள் வெளியாகின. முழுக்க முழுக்க அரசியல் படமாக தளபதி 70 உருவாகும் எனவும் சொல்லப்பட்டது. முக்கியமாக இந்தப் படத்திற்குப் பின்னர் அரசியலில் கவனம் செலுத்தவுள்ள விஜய், சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது தளபதி 70 படத்தின் இயக்குநர் ரேஸில் எச்.வினோத்தின் பெயரும் அடிபடுகிறது.

Goat

சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எச்.வினோத். அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று, அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். துணிவு வெளியானதும் கமல்ஹாசனிடம் இருந்து எச். வினோத்துக்கு அழைப்பு வந்தது. இதனால் கமலின் KH 233 படத்தை இயக்கவிருந்தார் வினோத். இந்தப் படம் பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், கமலின் 233வது படம் இன்னும் தொடங்கவில்லை, தக் லைஃப் முடிந்த பின்னரே எச்.வினோத் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம் கமல். இதனால் கார்த்தியின் தீரன் அதிகாரம் 2 படத்தை இயக்கவிருந்தார் எச்.வினோத். ஆனால் அதுவும் தாமதமாகும் என்பதால் கிடைத்த நேரத்தில் தரமான அரசியல் பின்னணி கொண்ட கதையை எழுதி முடித்துவிட்டாராம். இந்த கதையை விஜய்யிடம் எச்.வினோத் சொன்னதாகவும், அவரும் தளபதி 70 படத்தில் இணையலாம் என சிக்னல் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Karthik Subbaraj - Vijay

இதனால் தளபதி 70 படத்தை இயக்கவுள்ளது ஷங்கரா அல்லது எச்.வினோத்தா என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இன்னொரு பக்கம் விஜய்யின் ஃபேவரைட் இயக்குநர் அட்லீயும் தளபதி 70 ரேஸில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை அஜித்துடன் பயணித்து வந்த வினோத், முதன்முறை விஜய் கூட்டணியில் இணைந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

From around the web