சரக்கு அடிச்சிட்டு படுக்க கூப்பிட்டாங்க… பிரபல பிக்பாஸ் நடிகை பகீர் குற்றசாட்டு

 
ankita-lokhande

தென்னிந்திய சினிமாவில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் அது தனக்கு மோசமான அனுபவமாகவே அமைந்ததாகவும் பிக் பாஸ் நடிகை அங்கிதா லோகேந்தே கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் 17-வது சீசன் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதில் கலந்து கொண்ட நடிகை அங்கிதா லோகேந்தே மூன்றாவது இடம் பிடித்தார். நிகழ்ச்சியில் இவர் தனது கணவர் விக்கி ஜெயினுடன் கலந்து கொண்டார்.

ankita-lokhande

தனது சினிமா அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருப்பவர், பட வாய்ப்புக்காக 19 வயதில் தான் எதிர்கொண்ட மோசமான அனுபவம் குறித்தும் கூறியிருக்கிறார். அதில் அவர் பேசியிருப்பதாவது, “அப்போது எனக்கு 19 வயது இருக்கும். ஒரு தென்னிந்தியப் படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்டேன். பிறகு சில நாட்களிலேயே நான் அந்தப் படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாகவும் உடனே வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுமாறும் கேட்டார்கள்.

உண்மையில் எனக்கு அந்த செய்தி மகிழ்ச்சியானதாக இருந்தது. எப்படி என்னை உடனே தேர்ந்தெடுத்தார்கள் என்ற சந்தேகமும் வராமல் இல்லை. நான் அங்கு சென்றபோது என்னுடன் வந்தவரை வெளியே நிற்க சொல்லி என்னை மட்டும் உள்ளே அழைத்தார்கள். நான் உள்ளே போனதும் தயாரிப்பாளருடன் படுக்கையில் இருந்தால் மட்டுமே பட வாய்ப்பு எனச் சொன்னார்கள். 19 வயது பெண்ணுக்கு அந்த சூழல் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

ankita-lokhande

‘உங்கள் தயாரிப்பாளருக்கு நடிப்பதற்கு ஆள் தேவை என்று நினைத்தேன். ஆனால் படுப்பதற்கு தேடுகிறீர்கள் என்றால் அதற்கான ஆள் நான் இல்லை’ என வெளியே வந்துவிட்டேன். இப்படியான சூழ்நிலையை அதன் பிறகும் பலமுறை எதிர்கொண்டேன். இது வருத்தமான விஷயம்” எனக் கூறியுள்ளார்.

From around the web