சூப்பர்ஸ்டார் பட்டத்தில் எந்த பெருமை இல்லை.. நடிகை பார்வதி அதிரடி.. வைரல் வீடியோ!

 
Parvathy Thiruvothu

சூப்பர் ஸ்டார் பட்டத்த போட்டுக்கிறதுல என்ன பெருமை இருக்கிறது என நடிகை பார்வதி திருவோத்து கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2006-ல் வெளியான ‘அவுட் ஆஃப் சிலபஸ்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி திருவோத்து. தொடர்ந்து தமிழில் சசி இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘பூ’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளார். விஜய் டிவியின் புதுமுக நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.

கிரண் டிவியின் ஆங்கராக தன்னுடைய பயணத்தை துவங்கிய பார்வதிக்கு அதன்மூலமே திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பரதநாட்டிய கலைஞராகவும் உள்ள பார்வதிக்கு என்னு நின்டே மொய்தீன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. அந்த படத்தில் காஞ்சனமாலா என்ற கேரக்டரில் இவர் மிகச்சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். இந்தப் படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டு ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது.

Parvathy Thiruvothu

தமிழில் பூ படத்தில் அறிமுகமான பார்வதி, தொடர்ந்து மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடைய படங்களில் தனக்கு அழுத்தமான கேரக்டர்கள் இருப்பதை உறுதி செய்த பின்பே படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார். தற்போது பா ரஞ்சித் -விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

முன்னதாக நவரசா இணைய தொடரிலும் பார்வதி நடித்துள்ளார். மலையாளத்திலும் சார்லி, டேக் ஆஃப், கூடே, வைரஸ், உயரே ஆகிய படங்கள் பார்வதிக்கு அதிகமான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன. பெண்களுக்கு ஆதரவான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்துவரும் பார்வதி, பல இளம்பெண்களுக்கு ரோல் மாடலாக உள்ளார். இந்நிலையில் சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்த கேள்விக்கு பார்வதி அளித்துள்ள பதில் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.


சூப்பர்ஸ்டார் பட்டம் யாருக்கும் எதையும் கொடுத்துவிட முடியாது என்று அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்தப் பட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பட்டம் இமேஜ் கொடுக்கிறதா என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். தன்னை ஒரு சூப்பர் ஆக்டர் என்று கூறினால் தான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்றும் ஆனால் ஸ்டார் என்று சொல்வதில் என்ன இருக்கிறது என்றும் அவர் கேட்டுள்ளார். மலையாளத்தில் சூப்பர் ஆக்டர்களாக பகத் பாசில், ஆசிப் மற்றும் ரீமா ஆகியோர் உள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

From around the web