பாடல்கள் இல்லை.. ரொமான்ஸ் இல்லை.. ஜெயிலரை ரிஜெக்ட் செய்த சூப்பர் ஸ்டார்.. காரணம் இதுதான்

 
Jailer

‘ஜெயிலர்’ படத்தில் பாடல்கள் இல்லை, ரொமான்ஸ் இல்லை என கூறி தெலுங்கு சூப்பர் ஸ்டார் ரிஜெக்ட் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் மூலம் பிரபலமான இயக்குநர் நெல்சன் திலிப்குமார் நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்கினார். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், மலையாள மெகா ஸ்டார் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சரவணன், யோகி பாபு, விநாயகன், ரெட்டின் கிங்ஸ்லி என பலர் நடித்து உள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. கடந்த 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம் மெகா ஹிட்டாகி உள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை இப்படம் பெற்று இருக்கிறது. இந்த திரைப்படம் முதல் நாளில் 90 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. அதேபோல் இந்தப் படம் முதல் வார முடிவில் 402 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

Jailer

வெற்றியைக் கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை பரிசாக வழங்கியுள்ளார். அதே போல இயக்குநர் நெல்சனுக்கு காசோலையுடன் போர்ஷே காரையும் பரிசாக வழங்கியிருக்கிறார். ஜெயிலர் திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் 100 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருந்தார். 

தற்போது படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதிமாறன் மேலும் 100 கோடி ரூபாயை நடிகர் ரஜினிகாந்த்திற்கு லாபத்தில் பங்கு வழங்கியுள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் முதல் 200 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகர் என்ற மிகப்பெரும் சாதனையை ரஜினிகாந்த் படைத்திருக்கிறார்.

Chiranjeevi - Nelson

முதன் முதலில் ஜெயிலர் படத்தின் கதையை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியிடம் தான் நெல்சன் திலீப்குமார் கூறியுள்ளாராம். ஆனால், படத்தில் பாடல்கள் இல்லை, ரொமான்ஸ் இல்லை என கூறி படத்தை அவர் ரிஜெக்ட் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

From around the web