வெளியானது ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டிரெய்லர்.. சில்க் ஸ்மிதா ரசிகர்களுக்கு இண்ப அதிர்ச்சி!

 
Mark Antony

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

லத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் நடித்து வரும் படம் ‘மார்க் ஆண்டனி’. இந்தப் படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இது விஷாலின் 33-வது படமாகும். இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர் வினோத்குமார் திட்டமிட்டிருக்கிறார்.

Silk Sumitha

இந்த படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் கார்த்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

கேங்ஸ்டர் கைகளில் டைம் மிஷின் (Time Machine) கிடைத்தால் என்ன ஆகும் என்பதை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் டிரெய்லரில் வரும் காட்சியில் மறைந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதா இடம்பெற்றுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

From around the web