நாளை வெளியாகிறது ‘ஜவான்’ படத்தின் டிரெய்லர்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் ஷாருக்கான்!

 
Jawan

நடிகர் ஷாருகான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படத்தின் நாயகன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அட்லி இயக்கத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

SRK

ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வந்த நிலையில் தற்போது ‘ஜவான்’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படத்தின் நாயகன் ஷாருகான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


அதில், ஜூலை 10-ம் தேதி காலை 10.30 மணிக்கு டிரெய்லரை வெளியிடவுள்ள படக்குழுவினர் அதற்க்கு ஜவான் பிரிவியூ ( Jawan Prevue) என்று பெயரிட்டுள்ளனர். தமிழ் சினிமாவின் இயக்குனர் மற்றும்  நடிகர்களை வைத்து இந்தியில் எடுக்கப்படும் ஜவான் படத்திற்கு பாலிவுட், டோலிவுட் ரசிகிரகள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது.

From around the web