தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!

 
Captain Miller

தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

Captain Miller

பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யுப் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்.

1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28-ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. அதிரடி காட்சிகள் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், யூடியூப்பில் 3 கோடி பார்வைகளைக் கடந்தது.

வரும் 12-ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web