திரையுலகில் தொடரும் சோகம்.. பழம்பெரும் நடிகர் காலமானார்.. ரசிகர்கள் இரங்கல்!

 
Gufi Paintal

‘மகாபாரதம்’ தொடரில் சகுனியாக நடித்த நடிகர் குஃபி பெயின்டல் உடல் நலக்குறைவால் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 79.

1975-ல் வெளியான ‘ரஃபு சக்கர்’ படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் நடிகர் குஃபி பெயின்டல். 80-களில் பாலிவுட் படங்களான ‘சுஹாக்’, ‘தில்லாகி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களான ‘சிஐடி’, ‘ஹலோ இன்ஸ்பெக்டர்’ போன்றவற்றில் நடித்துள்ளார். இருப்பினும் பிஆர் சோப்ராவின் ‘மகாபாரதம்’ தொடரில் சகுனி மாமா என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். 

Gufi Paintal

இந்த நிலையில், நடிகர் குஃபி பெயின்டலுக்கு இரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் சில காலமாகவே இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கடந்த 10 நாட்களாக உயிருக்கு போராடி வந்தவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 

இதனால் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என அவரது குடும்பத்தார் எதிர்பார்த்தனர். திடீரென நேற்று காலை 9 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் தூக்கத்திலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உயிர் தூக்கத்திலேயே நிம்மதியாக பிரித்ததாக அவரது மருமகன் ஹிட்டன் பெயின்டல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

RIP

திரையுலகில் ஒருவர் பின் ஒருவராக மரணம் அடைவது திரை ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியான செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது அனைவர் மத்தியிலும் ‘சகுனி மாமா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான குஃபி பெயின்டல் மறைவு செய்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் அவரின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

From around the web