‘ராயன்’ படத்தின் 3வது பாடல் இன்று மாலை வெளியாகிறது.. படக்குழு அறிவிப்பு

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் 3-வது பாடல் ‘ராயன் ரம்பிள்’ இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், நடிப்பையும் தாண்டி பின்னணிப் பாடகராகவும், பாடலாசிரியராகவும், ப. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் தன்னை நிரூபித்தவர் ஆவார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தனுஷ் தனது 50வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்துக்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தாயரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன்,பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம் , சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த மே 9-ம் தேதி இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தனுஷ் பாடிய ‘அடங்காத அசுரன்’ என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து மே 24-ம் தேதி ‘வாட்டர் பாக்கெட்’ என்ற 2வது பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
#RaayanRumble releasing today at 6PM💥#Raayan in cinemas from July 26 @dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara @Aparnabala2 @varusarath5 #Saravanan @omdop @editor_prasanna @PeterHeinOffl @jacki_art… pic.twitter.com/oISl7m5YXZ
— Sun Pictures (@sunpictures) July 5, 2024
இந்நிலையில், ராயன் படத்தின் 3-வது பாடல் ‘ராயன் ரம்பிள்’ இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (ஜூலை 6) சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராயன் படம் வரும் 26-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.