வெளியானது ‘எல்ஜிஎம்’ டீசர்.. ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் டீசர்!!

 
LGM

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை அணியின் கேப்டனுமான தோனி, கிரிக்கெட்டைத் தாண்டி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் தோனியும் அவரது மனைவி சாக்ஷி சிங் இணைந்து திரைப்படங்களைத் தயாரித்து வருகின்றனர்.

LGM

அந்த வகையில் அவர்களின் தயாரிப்பில் தற்போது வெளிவரக் காத்திருக்கும் திரைப்படம் எல்ஜிஎம் -  ‘லெட்ஸ் கெட் மேரிட்’. தோனிக்கும், சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் உள்ள நட்புப் பிணைப்பை காட்ட, தங்களது தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தை தமிழில் தயாரிப்பது என அவர்கள் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு விஸ்வஜித் என்ற மலையாள இசையமைப்பாளர் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்திருக்கும் நிலையில், அதன் டீசர் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் டீசரை தல தோனியும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் ஒன்றாகச் சேர்ந்து வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

From around the web