குறி வச்சா இரை விழனும்.. ‘வேட்டையன்’ ஆக மாறிய ரஜினிகாந்த்.. டைட்டில் அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 170’ படத்தின் பெயர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினியின் 170-வது படம் குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தது. இந்தப் படத்தை ‘ஜெய்பீம்’ பட இயக்குநர் ஞானவேல் இயக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
தலைவர் 170 என்ற பெயரில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று (இன்று) வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு ‘வேட்டையன்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பெயர் குறித்த டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 'குறி வச்சா இரை விழணும்' என்ற வசனத்துடன் படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தின் புதிய படத்திற்கு வேட்டையன் என பெயரிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் பெயர் குறித்த டீசர் வீடியோவை ரசிகர்கள் சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.