பிரபல சீரியல் நடிகையின் தீடீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

 
Anbeeva serial

அன்பே வா சீரியலில் இருந்து நடிகை டெல்னா டேவிஸ் விலகி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் சினிமா கதாநாயகிகளுக்கு நிகராக சின்னத்திரை சீரியல் கதாநாயகிகளும் பிரபலமாகி வருகிறார்கள். குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்களில் வரும் நாயகிகள் மிக விரைவில் லட்சக்கணக்கில் ரசிகர்களை சமூக வலைதளங்களில் பெற்றுவிடுகிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ தொடரின் மூலம் பிரபலமானவர் டெல்னா டேவிஸ். 

கேரளாவை சேர்ந்த இவர் வழக்கறிஞர் ஆவார். இவர் மலையாளத்தில் சில தொடர்களிலும், படங்களிலும் நடித்திருக்கிறார். பின்னர் அன்பே வா சீரியல் மூலம் தான் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் தான் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சன் டிவியில் 900 எபிசோடுகளை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது அன்பே வா சீரியல். நல்ல ரேட்டிங் கிடைத்து வரும் அந்த தொடருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது.

Delna Davis

இந்த நிலையில் சீரியலில் கதாநாயகியாக நடித்திருக்கும் டெல்னா டேவிஸ் சீரியலை விட்டு விலகிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “டியர் அன்பே வா ஃபேமிலி, அன்பே வா தொடரிலிருந்து விடைபெறும்போது ஆழ்ந்த உணர்ச்சிகளாலும், நன்றியினாலும் என் இதயம் நிரம்பி வழிகிறது. இது வெறும் குட் பை மட்டுமல்ல உங்களுடைய அன்பிற்கும், நீங்கள் கொடுத்த அத்தனை நினைவுகளுக்கும் நன்றி! என்னுடைய வாழ்க்கையின் ஒரு அத்தியாயமாக வாழ்நாள் முழுவதும் அன்பே வா கொடுத்த அழகான நினைவுகள் இருக்கும். ‘வருமிகா’ ரசிகர்களுக்கு, உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுடைய அன்பு இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக ஆக்கியிருக்கிறது. 

புரொடக்‌ஷன் ஹவுஸ் சரிகம தமிழுக்கும், சன் டிவிக்கும் என்னுடைய நன்றி! என்னுடைய திறமையை வெளிக்கொண்டு வர எனக்கொரு பிளாட்ஃபார்ம் உருவாக்கிக் கொடுத்தீர்கள். இந்த புராஜெக்ட்டில் நானும் ஒரு பார்ட் ஆக இருந்ததைப் பெருமையாக நினைக்கிறேன். நினைவுகளுக்கு நன்றி! தொடர்ந்து உங்களது ஆதரவை ‘அன்பே வா’விற்குக் கொடுங்கள்!

சைனிங் ஆஃப் பூமிகா!” எனப் பதிவிட்டிருக்கிறார். இந்தத் தொடரில் இவர் பூமிகா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடித்திருந்த விராட் நடித்துக் கொண்டிருந்தார். ஆன் ஸ்கிரீனில் வருண் -  பூமிகா என்கிற இந்த ஜோடிக்கு சமூகவலைதள பக்கங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள். பூமிகாவை மிஸ் செய்வதாக அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து சமூகவலைதள பக்கங்களில் கமென்ட் இட்டுக் கொண்டிருக்கின்றனர்.

From around the web