ஜெயிலர் படத்தின் வெற்றி... ரஜினிக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை பரிசாக வழங்கிய கலாநிதி மாறன்!

 
Rajini - Kalanidhimaran

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை கலாநிதிமாறன் பரிசாக வழங்கியுள்ளார்.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் மூலம் பிரபலமான இயக்குநர் நெல்சன் திலிப்குமார் நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்கினார். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், மலையாள மெகா ஸ்டார் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சரவணன், யோகி பாபு, விநாயகன், ரெட்டின் கிங்ஸ்லி என பலர் நடித்து உள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. கடந்த 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம் மெகா ஹிட்டாகி உள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை இப்படம் பெற்று இருக்கிறது. இந்த திரைப்படம் முதல் நாளில் 90 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. அதேபோல் இந்தப் படம் முதல் வார முடிவில் 402 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

Jailer

இதுவரை எந்த ஒரு திரைப்படமும் ஒரே வாரத்தில் ரூ.400 கோடி வசூலை தாண்டியதில்லை. அந்த வகையில் முதன்முறையாக ஒரு வாரத்தில் ரூ.402 கோடி வசூல் செய்து ஜெயிலர் சாதனை படைத்தது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து இருக்கிறார். மேலும் அவரிடம் காசோலை அளித்து பாராட்டு தெரிவித்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.


இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை பரிசாக வழங்கியுள்ளார் கலாநிதி மாறன். அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மாடல் காரின் விலை ரூ.1.25 கோடியாகும். பாதுகாப்பு, சொகுசு என அனைத்திலும் சிறந்த முறையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது

From around the web