ஜெயிலர் படத்தின் வெற்றி... நெல்சனுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்?

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஹிட் ஆகி உள்ள நிலையில், நெல்சனுக்கு வழங்கப்பட்ட பரிசு குறித்து தகவல் பரவி வருகிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் மூலம் பிரபலமான இயக்குநர் நெல்சன் திலிப்குமார் நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்கினார். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், மலையாள மெகா ஸ்டார் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சரவணன், யோகி பாபு, விநாயகன், ரெட்டின் கிங்ஸ்லி, என பலர் நடித்து உள்ளனர்.
அனிருத் இசையமைத்து உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. கடந்த 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட்டாகி உள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை இப்படம் பெற்று இருக்கிறது. அனிருத் இசையமைத்து உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை இப்படம் பெற்று இருக்கிறது.
இந்த நிலையில், ‘ஜெயிலர்’ உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீசில் ரூ.375 கோடியைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் 2 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருவதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது. ஜெயிலர் பட வெற்றியால் நடிகர் ரஜினிகாந்த் செம்ம குஷியில் உள்ளார். அதோடு தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் செம்ம ஹாப்பியாக உள்ளாராம்.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஒரு புது டிரெண்ட் உருவாகி உள்ளது. அதன்படி ஒரு படம் வெற்றி பெற்றால் அப்படத்தின் இயக்குனருக்கோ, நடிகருக்கோ தயாரிப்பாளர்கள் கார் பரிசளித்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் நெல்சனுக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கார் பரிசளிக்க உள்ளதாக அண்மையில் செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் நெல்சனே அதுகுறித்து பேசி இருக்கிறார்.
2 Minutes Sema Fun Video 🤣😂#NelsonDilipkumar #RedinKingsley #JafferSadiq #Jailer Experience#Kaavaalaa Song #Tamannaah #Rajinikanth𓃵 pic.twitter.com/KweXNCAn57
— Deep_breathe_Cinema (@CinemaDeep) August 22, 2023
ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சனை அப்படத்தில் காமெடியனாக நடித்த ரெடின் கிங்ஸ்லி பேட்டி ஒன்று எடுத்தார். அந்த பேட்டியில் ரெடின் கேட்ட பல கலாட்டாவான கேள்விகளுக்கு நெல்சனும் அசராமல் பதிலளித்தார். அதில் ஒரு கேள்வி தான் இந்த கார் பரிசு விவகாரம். வீட்டு வாசலில் ரோல்ஸ் ராய்ஸ் கார் நிக்குதாமே என ரெடின் கேட்டவுடன் ஷாக் ஆன நெல்சன், அதை நானும் கேள்விப்பட்டேன், நடந்தா சந்தோஷம் என தன் ஆசையை சைடு கேப்பில் கூறிவிட்டார்.
இதன்மூலம் தனக்கு இன்னும் எந்த பரிசும் வழங்கப்படவில்லை என்பதை சூசகமாக தெரிவித்த நெல்சன், ரெடினை தன் பங்கிற்கு கலாய்க்கும் விதமாக, ஜெயிலர் வெற்றியால் அனைவருக்கு டிவி பரிசாக வழங்கப்பட இருப்பதாக, நெல்சன் கூறியதுடன், ஷாக் ஆன ரெடின், சரி நீ என்ன பண்ண போற எங்களுக்கு என நெல்சனை கேட்க, அவரோ, ஆளுக்கு ஒரு முத்தம் கொடுக்கிறேன் வாங்கிக்கோங்க எனக்கூறி அந்த பேட்டியை காமெடி களேபரமாக்கிவிட்டார்.