விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

 
Goat

விஜய் நடிக்கும் ‘கோட்’ (The Greatest Of All Time) படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

‘லியோ’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னையில் இளம் விஜய் நடிக்கும் காட்சி மற்றும் பாடல்கள் படமாக்கப்பட்டன. பின்னர் தாய்லாந்து சென்று அங்கு அதிரடி ஆக்‌ஷன் காட்சி ஒன்றை படமாக்கியது. தற்போது இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக தளபதி 68 படக்குழுவினர் ஐதராபாத்தில் முகாமிட்டு உள்ளனர்.

GOAT

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் நேற்று மாலை 6 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியானது.

அதன்படி இந்த படத்துக்கு ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (The Greatest Of All Time) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் இடம்பெற்றுள்ளார். அந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானது.


இந்நிலையில் இந்த படத்தின் 2வது லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ‘ஆக்சனுக்கு தயாராகுங்கள்’ என பதிவிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web