சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ ரிலீஸ்.. ரசிகர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

 
Pathu thala

சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி தர மறுத்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவ ராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியான ‘மஃப்டி’ படம் சூப்பர் ஹிட் அடித்து வசூல் சாதனையும் செய்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, சிவ ராஜ்குமார் கேரக்டரில் சிம்புவும், ஸ்ரீ முரளியாக கெளதம் கார்த்திக்கையும் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஓபிலி கிருஷ்ணா இயக்கிறார். இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், டீஜய் அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

pathu thala

இப்படத்தின் முதல் சிங்கிளான ‘நம்ம சத்தம்’ கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இந்நிலையில் ‘பத்து தல’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘நினைவிருக்கா’ பாடல் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகி வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 18-ம் தேதி நடைபெற்ற நிலையில், நாளை (மார்ச் 30) திரைக்கு வரவுள்ளது. ஏற்கனவே மாநாடு, வெந்து தணிந்தது காடு என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த சிம்பு, பத்து தல படத்தின் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பார் என்கிற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

pathu thala

இதனிடையே, சிறப்பு காட்சிகளின்போது ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ‘பத்து தல’ படத்திற்கு நள்ளிரவு மற்றும் அதிகாலை 4 மணி, 5 மணி காட்சிகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 8 மணிக்கே பத்து தல படத்தின் முதல் காட்சி திரையிடப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

From around the web