சுந்தர்.சி நடித்துள்ள ‘தலைநகரம் 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சுந்தர்.சி நடித்துள்ள ‘தலைநகரம் 2’ படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2006-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘தலைநகரம்’. இந்தப் படத்தில் இயக்குநர் சுந்தர்.சி நாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் வடிவேலு, ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் சுந்தர்.சியுடன் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வடிவேலுவின் ‘நாய் சேகர்’ கெட்டப் மற்றும் காமெடி பெரும் பிரபலமானது.
அதன்பின் தற்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை அஜித்தின் 'முகவரி', சிம்புவின் 'தொட்டி ஜெயா', பரத்தின் 'நேபாளி', ஷாமின் '6 கேண்டில்ஸ்', சுந்தர்.சி நடித்த 'இருட்டு' ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் பாலக் லால்வானி, தம்பி ராமையா, 'பாகுபலி' பிரபாகர், ஆயிரா, ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரைட் ஐ சார்பாக எஸ்.எம். பிரபாகரன் இப்படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘தலைநகரம் 2’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது. மேலும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
The most Awaited #Thalainagaram2 Movie Release on June 23rd 🔥#RightisBack ✅
— Team AIM (@teamaimpr) June 15, 2023
Staring #sundarc #pallakl #bahubaliprabhakar
Written & Directed by @VDhorai
Music by @ghibranoffical
Cinematographer @krishnasamy_e
Editor @editorsudharsan
Sound designer @svijayrathinam
Cast :… pic.twitter.com/bgtDNrxiCH
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தலைநகரம் 2’ திரைப்படம் வருகிற 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.