ஆட்டம் போட்ட நிறைமாத கர்ப்பிணி நடிகை.. பதறிய ரசிகர்கள்.. வைரல் வீடியோ!

 
Amala Paul

நிறைமாத கர்ப்பிணியான நடிகை அமலா பால், 9-ம் மாதத்தை வரவேற்க்கும் விதமாக ஆட்டம் போட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2009-ல் வெளியான ‘நீலதாமரா’ படத்தின் மூலம் மலையாள சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனைத் தொடர்ந்து, 2010-ல் வெளியான ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் சிந்து சமவெளி, மைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மைனா படத்தில் மலைவாழ் கிராமத்தில் வாழும் அழகிய பெண்ணாக இவர் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தெய்வத்திருமகள் படத்தின் படப்பிடிப்பின் போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மனமுவந்து பிரிவதாக இருவரும் அறிவித்து பிரிந்து விட்டனர். மலையாளம், தெலுங்கு, தமிழ் என நடித்துவரும் அமலாபால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

Amalapaul

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி அமலா பாலின் பிறந்தநாள் அன்று தன்னுடைய காதலன் ஜெகத் தேசாய் புரோபோஸ் செய்த, புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட அவை படு வைரலானது. மேலும் தன்னுடைய காதலன் புரோபோஸ் செய்த ஒரே வாரத்தில் அமலா பால், ஜெகத் தேசாய் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

அமலாபால் ஜெகத் தேசாய் ஜோடிக்கு திருமணமான இரண்டே மாதத்தில் அமலா பால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலம் அறிவித்தார். கர்ப்ப காலத்தில் தனது மகிழ்ச்சி மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு யோகா செய்வது, தியானம் என அமைதியான முறையில் நாட்களை நகர்த்தி வந்தார் அமலா பால்.

A post shared by Amala Paul (@amalapaul)

இவருக்குப் பக்க பலமாக இவரது கணவர் ஜெகத்தும் அமலா பால் உடனிருந்து கவனித்தார். தன் கணவரை பெற்றது தான் வாழ்நாளில் செய்த பாக்கியம் எனவும் சமீபத்தில் உருகியிருந்தார் அமலா பால். தன்னுடைய ஏழாவது மாதம் தொடங்கியபோது, கிளப்பில் நடனம் ஆடி அதை கொண்டாடினார், போன மாதம் வளைகாப்பும் நடத்தினார்.

இப்போது ஒன்பதாவது மாதத்தை எட்டியிருக்கிறார் அமலா பால். இதை வரவேற்கும் விதமாக வீட்டிலேயே கியூட்டாக நடனம் ஆடியிருக்கிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்து, ‘ஒன்பதாவது மாதத்தை வரவேற்கிறேன். உங்கள் அனைவருடைய அன்புக்கும் நன்றி’ எனக் கூறியுள்ளார்.

From around the web