என்னால் முடிந்த சிறிய உதவி.. ஒரு வயது சிறுவனுக்கு பண உதவி செய்த பிரபல இசையமைப்பாளர்!

 
GV Prakash

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு 75,000 ரூபாய் பண உதவி செய்துள்ளார்.

2006-ல் வெளியான ‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். தொடர்ந்து கிரீடம், பொல்லாதவன், சேவல், அங்காடி தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

GV Prakash

இவர், 2014-ல் வெளியான ‘டார்லிங்’ படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, பென்சில்,திரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, புரூஸ்லி, திரிஷா இல்லனா நயன்தாரா,கடவுள் இருக்கான் குமாரு, குப்பத்து ராஜா, வாட்ச் மேன் போன்ற கமர்ஷியல் படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.

தற்போது தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனைத்தவிர, தனது 25-வது படமான கிங்ஸ்டன் படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு வயது குழந்தையின் சிறுமூளைக்கு அருகில் உள்ள கட்டியை அகற்ற மருத்துவ உதவி கேட்டவருக்கு  ஜி.வி.பிரகாஷ் உதவியுள்ளார்.


சம்பந்தப்பட்ட நபருக்கு 75,000 ரூபாயை அனுப்பியுள்ள ஜி.வி.பிரகாஷ். அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். என் பக்கத்தில் இருந்து சிறிய உதவி.. வாழ்த்துகள் என்றும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  ஜி.வி.பிரகாஷின் இந்த உதவிக்கு அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

From around the web