பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்.. பாலிவுட்டில் தொடரும் சோகம்!!

 
Sameer

பாலிவுட் மூத்த நடிகரான சமீர் காகர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று காலமானார். அவருக்கு வயது 70. 

நக்கட் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம், மிகவும் பிரபலமானவர் நடிகர் சமீர் காகர். இவர் நக்கட் தொடரைத் தவிர, சர்க்கஸ், சஞ்சீவானி போன்ற சில பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். மேலும், ஹாசி தோ ஃபேஸி, ஜெய் ஹோ, படேல் கி பஞ்சாபி ஷாதி உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

Sameer

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சமீர் காகர் இன்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அவரது சகோதரர் கணேஷ் காகர் உறுதிப்படுத்தி உள்ளார். நடிகர் சமீர் காகர் ஏற்கனவே சிறிநீரக பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். 

நேற்று மதியம் அவருக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு, சுயநினைவை இழந்தார். உடனே நாங்கள் மருத்துவர்களை அழைத்தோம், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கும்படி கூறினார். இதையடுத்து, போரிவலி எம்.எம் மருத்துவமனையில் அனுமதித்தோம் அவருக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருந்த போதும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4:30 மணி அளவில் உயிரிழந்தார் என்றார்.

RIP

அவரது இறுதிச்சடங்கு நடிகர் சமீர் காகர் இல்லத்தில் நடைபெறும் என்றும், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பலில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு பாபாய் நாகா மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று, அவரது சகோதரர் கூறினார். ரசிகர்களால், கோப்டியா என்று செல்லமாக அழைக்கப்படும் பழம்பெரும் நடிகர் சமீர் காகர் உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

From around the web