‘தி கேரளா ஸ்டோரி’ நடிகைக்கு விபத்து.. இப்போது எப்படி இருக்கிறார்?

 
Adah Sharma

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் நடிகை அதா சர்மா விபத்தில் சிக்கிய விவகாரம் இணையத்தில் தீயாய் பரவியது.

விபுல் ஷா தயாரிப்பில சுதிப்டோ சென் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்தப் படத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் திரைப்படம் கடந்த 5-ம் தேதி வெளியாகி பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. 

இந்தப் படத்தில் அப்பாவி இந்து பெண்களை குறிவைத்து மூளை சலவை செய்து இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டதாகவும், ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அனுப்புவதாகவும் கேரளாவை சேர்ந்த பெண்கள் பலர் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Adah Sharma

இதையடுத்து படத்திற்கு எதிராக கண்டனம் மற்றும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகிறது. மேலும், இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதேபோல் தமிழ்நாட்டில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நடிகை ஆதா ஷர்மா ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கினார். கேரள ஸ்டோரிக்கு படத்துக்கு எதிர்ப்பு கிளப்பு வரும் நிலையில் நடிகை விபத்தில் சிக்கிய விவகாரம் இணையத்தில் தீயாய் பரவியது.


தி கேரளா ஸ்டோரி படக்குழுவுக்கு மிரட்டல்கள் வந்த நிலையில் நடிகை ஆதா ஷர்மா விபத்தில் சிக்கியது பேசுப்பொருளானது. இந்த விவகாரத்தை உடனே அறிந்த நடிகை தனது ட்விட்டர் பக்கத்தில் விபத்து குறித்து பதிவிட்டார். அதில்  “நான் நன்றாக தான் இருக்கிறேன். விபத்து குறித்து தகவல் பரவியதும் எனக்கு நிறைய மெசேஜ்கள் வந்தது. எங்கள் படக்குழுவில் அனைவரும் நன்றாக இருக்கிறோம். ஒன்றும் பிரச்னையில்லை. பெரிய விபத்து எதுவும் இல்லை. நீங்கள் என் மீது கொண்ட அக்கறைக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

From around the web