வசூலில் பட்டையை கிளப்பும் ஜெயிலர்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்பட வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் மூலம் பிரபலமான இயக்குநர் நெல்சன் திலிப்குமார் நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்கினார். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், மலையாள மெகா ஸ்டார் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சரவணன், யோகி பாபு, விநாயகன், ரெட்டின் கிங்ஸ்லி, என பலர் நடித்து உள்ளனர்.
அனிருத் இசையமைத்து உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. கடந்த 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட்டாகி உள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை இப்படம் பெற்று இருக்கிறது. அனிருத் இசையமைத்து உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை இப்படம் பெற்று இருக்கிறது.
இந்த நிலையில், ‘ஜெயிலர்’ உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீசில் ரூ.375 கோடியைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஜெயிலர்’ திரையரங்குகளில் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்த நிலையிலும் வரவேற்பு குறையவில்லை. மேலும், ஜெயிலர் திரைப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Alapparai kelappitom 💥🔥🔥#JailerRecordMakingBO@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @mirnaaofficial @kvijaykartik @Nirmalcuts @KiranDrk @StunShiva8… pic.twitter.com/d0gvpwUwyy
— Sun Pictures (@sunpictures) August 17, 2023
இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.375.40 கோடியை கடந்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.