வெளியானது ‘அரண்மனை 4’ படத்தின் முதல் பாடல்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அரண்மனை 4’ படம் வரும் 26-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு வெளியிட்டுள்ளது.
2014-ல் சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘அரண்மனை’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சித்தார்த் நடித்திருந்தார். 2021-ம் ஆண்டு இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. ஆர்யா, ராஷிகண்ணா, சாக்ஷிஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஹாரர் - காமெடி ஜானரில் சீரிஸாக வெளியாகும் இப்படத்தின் நான்காவது பாகத்துக்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இந்தப் படத்தையும் சுந்தர்.சி இயக்குகிறார். இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் இந்தப் படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் A.C.S அருண்குமார் மற்றும் அவ்னி சினிமாக்ஸ் (பி) லிமிடெட் சார்பில் குஷ்பு தயாரிப்பில் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
The fear is back, stronger than ever👹#Aranmanai4🏚 will send shivers down your spine in theaters from April 26th🔥
— Avni Cinemax (@AvniCinemax) April 14, 2024
Get ready for the biggest scare-fest of the year👻#Aranmanai4FromApril26#SundarC @khushsundar @benzzmedia @tamannaahspeaks #RaashiKhanna @hiphoptamizha pic.twitter.com/yYSGCpcWQd
இந்த நிலையில், படம் வெளியாகும் தேதியை படக்குழு இன்று காலை அறிவித்துள்ளது. அதன்படி, அரண்மனை 4 படம் வருகிற 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 'அச்சச்சோ' என்ற முதல் பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் தமன்னாவும் ராஷி கண்ணாவும் நடனமாடி அசத்தியுள்ளனர். தற்போது இந்த பாடல் வைரலாகி வருகிறது.