சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.. எப்போ படம் ரிலீஸ்?

 
Aranmanai 4

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரண்மனை 4’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

2014-ல் சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘அரண்மனை’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சித்தார்த் நடித்திருந்தார். 2021-ம் ஆண்டு இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. ஆர்யா, ராஷிகண்ணா, சாக்‌ஷிஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Aranmanai 4

ஹாரர் - காமெடி ஜானரில் சீரிஸாக வெளியாகும் இப்படத்தின் நான்காவது பாகத்துக்கான அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தையும் சுந்தர்.சி இயக்குகிறார். இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் இந்தப் படத்தை Benzz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு  தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பொறுத்தவரை அரண்மனைக்கு வெளியே பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் நின்று கொண்டிருக்கிறார். அரண்மனைக்கு பின்னால் பேய் உருவம் ஒன்று காட்டப்படுகிறது. படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web