காதலியை கரம் பிடித்த பிரபல சீரியல் நடிகர்.. ரசிகர்கள் வாழ்த்து.. வைரலாகும் வீடியோ!
பிரபல சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்திக்கும் அவரது நீண்ட காதலிக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்து முடிந்தது.
ராஜ் டிவியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் அஸ்வின் கார்த்தி. இவர், ஜீ தமிழ், விஜய் டிவி, கலைஞர் டிவியில் பல சீரியல்களில் நடித்துள்ளார், மேலும் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘வானத்தை போல’ தொடரில் துளசியின் கணவர் ராஜபாண்டியாக அஸ்வின் கார்த்தி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் அஸ்வின் கார்த்தி மேக்அப் ஆர்ட்டிஸ்ட் கார்த்திகா என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் சமூக வலைதள பக்கங்களில் ஒன்றாக ரீலிஸ் போடுவது என தன் காதலை ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் சிறப்பாக நடந்து முடிந்தது.
அஸ்வின் கார்த்தி திருமணத்தில் ‘வானத்தை போல’ நடிகர் நடிகைகள், மற்றும் சீரியல் நடிகர் நடிகைகள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அஸ்வின் கார்த்தி - காயத்ரி ஜோடிக்கு ரசிகர்கள் அவர்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.