பிரபல நடன இயக்குநர் திடீர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்!

 
Rakesh

பிரபல நடன இயக்குநர் ராகேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 53.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் ரகேஷ். 2011-ம் ஆண்டு ‘அவ்வா’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு பிரபாஸ், மகேஷ்பாபு, வெங்கடேஷ் ராம் பொத்தனேனி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றினார். 

Rakesh

திருப்பதியில் பிறந்த இவரது இயற்பெயர் ராமா ராவ். திரைப்பட நடன இயக்குனரான பிறகு இவரது இயற்பெயரை ராகேஷ் என மாற்றிக் கொண்டார். ரியாலிட்டி ஷோக்களில் நடுவாராக இருந்தார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் இன்றி சிரமப்பட்டர். நடன பள்ளியை நடத்தினார். 53 வயதான ரகேஷ் சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். 

கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஐதராபாத் திரும்பிய அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் ஐதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

RIP

ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அதன் தீவிரம் அதிகமாக உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்க தொடங்கியதை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) மாலை அவர் உயிரிழந்தார். ராகேஷ் மாஸ்டரின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்களும், தெலுங்கு திரையுலக பிரபலங்களும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

From around the web