காதலரை கரம்பிடித்த பிரபல நடிகை.. வெளியான வெட்டிங் போட்டோஸ்.. ரசிகர்கள் வாழ்த்து!

 
Meera Nandan

பிரபல திரைப்பட நடிகை மீரா நந்தனுக்கு இன்று காலை குருவாயூர் கோவிலில்  திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

2007-ல் ஐடியா ஸ்டார் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக திரை பயணத்தை தொடங்கியவர் மீரா நந்தன். அதே ஆண்டு மலையாளத்தில் ஒளிபரப்பான ‘வீடு’ என்கிற தொடர் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து 2008-ம் ஆண்டு மலையாள படமான ‘முல்லா’ படத்தில் நடித்தார்.

Meera Nandan

பின்னர், 2009-ம் ஆண்டு வெளிவந்த ‘வால்மீகி’ படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். பின்னர் ஆதியுடன் இணைந்து ‘அய்யனார்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த மீரா நந்தன் கடந்த ஆண்டு வெளிவந்த ‘ஜெஸ்னா’ எனும் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை மீரா நந்தனுக்கும் அவரின் காதலரான பியூ ஸ்ரீஜு என்பவருக்கும் இன்று காலை குருவாயூர் கோவிலில்  திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். 

எளிய முறையில் நடந்துள்ள திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ரசிகர்கள் மீரா நந்தனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

From around the web