ஆண் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை.. குவியும் வாழ்த்துகள்!

 
ileana

நடிகை இலியானா தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படும் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

2006-ல் வெளியான ‘தேவதாசு’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் இலியானா. அதே ஆண்டு ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் இலியானா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

சமீப காலமாக, பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இலியானா, திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

Ileana

சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் இலியானா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என பதிவிட்டு, சாதனை பயணம் தொடங்கி விட்டது என்ற பொருள் அடங்கிய வாசகம் இடம்பெற்ற குழந்தையின் உடையையும் வெளியிட்டிருந்தார்.

இலியானாவிற்கு திருமணமாகாத நிலையில் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகை இலியான சமீபத்தில் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதிலும் ஒரு ட்விஸ்டாக அவரின் பெயர் மற்றும் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை.

A post shared by Ileana D'Cruz (@ileana_official)

இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி தனக்கு மகன் பிறந்ததாக இலியானா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்து ‘Koa Phoenix Dola’ என பெயர் சூட்டியுள்ளதாகவும் “எங்கள் அன்பு மகனை பூவுலகிற்கு வரவேற்பதில் நாங்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம். அதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.

From around the web