பிரபல நடிகைக்கு நிச்சியதார்த்தம்.. குவியும் வாழ்த்துகள்.. வைரல் வீடியோ

 
Umapathy - Ishwarya

நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா - ரம்பி ராமையா மகன் உமாபதி ஆகியோருக்கு திருமண நிச்சயதார்த்தம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது நடிப்பாலும் ஆக்‌ஷனாலும் பட்டையை கிளப்பியவர். அவரது சண்டைக்காட்சி, உடற்கட்டுக்கென்று இன்றுவரை ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக மட்டும் இல்லாமல் சேவகன், பிரதாப், ஜெய்ஹிந்த், சுயம்வரம், வேதம், ஏழுமலை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். அதுமட்டுமின்றி கர்ணா, கன்னடத்தில் துட்ட முட்ட ஆகிய படங்களுக்கு கதையையும் எழுதியிருக்கிறார்.

தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் வயதான பிறகு ஹீரோ ரோலுக்கு டாட்டா சொல்லிவிட்டார். இருந்தாலும் இன்னமும் ஹீரோ போன்றே இருப்பதாக ரசிகர்கள் கூறுவதுண்டு. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திலும் ஹரோல்டு தாஸ் என்ற கேரக்டரை ஏற்றிருந்தார். தியேட்டரில் விஜய் எண்ட்ரிக்கு எப்படி அப்ளாஸுகள் எழுந்தனவோ அதேபோல் அர்ஜுனின் எண்ட்ரிக்கும் எழுந்தன.

Umapathy - Ishwarya

நடிகர் அர்ஜுனுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு கன்னடத்தில் பிரேம பரஹா, தமிழில் சொல்லிவிடவா ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்தார் ஐஸ்வர்யா. இவர்களது காதலுக்கு இரண்டு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். அர்ஜுன் மகளும், தம்பி ராமையாவின் மகனும் காதலிக்கும் விஷயம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையே தந்தது. ஏனெனில் இரண்டு பேரும் இணைந்து ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. இந்நிலையில் இரண்டு பேரின் காதலுக்கும் க்ரீன் சிக்னல் விழுந்ததை அடுத்து நிச்சயதார்த்தம் இன்று நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி சென்னையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் ஐஸ்வர்யா - உமாபதி நிச்சயதார்த்தம் சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்துவருகின்றனர். தம்பி ராமையாவின் மகன் உமாபதி அதாகப்பட்டது மகா ஜனங்களே, மணியார் குடும்பம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web