காதலியை கரம்பிடித்தார் பிரபல நடிகர்.. பிரபலங்கள் வாழ்த்து.. வைரலாகும் புகைப்படங்கள்!

 
Kavin

நடிகர் கவின் தனது நீண்ட நாள் காதலி மோனிகாவுடன் இன்று திருமணம் நடைபெற்றது.

2011-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் அறிமுகமானவர் கவின். அதனைத் தொடர்ந்து தாயுமானவன், சரவணன் மீனாட்சி என சீரியல்களில் நடித்தன் மூலம் பிரபலமானார். திரைப்படங்களில் உதவி இயக்குநரானாராகவும் பணியாற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.

kavin

2017-ல் வெளியான ‘சத்ரியன்’, 2019-ல் வெளியான ‘நட்புனா என்னான்னு தெரியுமா’ படங்களில் நடித்தவர் 2021-ல் வெளியான ‘லிஃப்ட்’ படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. அதையடுத்து அவர் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

இதன் மூலம் கவினுக்கெனத் தனி ரசிகர் வட்டம் உருவானது மட்டுமல்லாமல், தயாரிப்பு மற்றும் விநியோக வட்டாரத்திலும் அவரது மதிப்பு உயர்ந்தது. தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், அனிருத் இசையில், ஒரு ரொமான்ஸ் படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில் அவரது திருமண அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

kavin

இந்த நிலையில், நடிகர் கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகா என்பவரை திருமணம் செய்யப் போவதாகவும் இவர்களது திருமணம் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இன்று இருவரது  திருமணம் சென்னையில் நடைபெற்றது. உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கவினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web