மருத்துவமனையிலேயே பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர்.. பிரபல கவர்ச்சி நடிகை வேதனை!!
பிரபல நடிகை ஷகிலா தனது வாழ்க்கையில் நடந்த மிக மோசமான சம்பவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார்.
மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன் லால் பட வசூலையே பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு ஒரு காலத்து கெத்து காட்டியவர் கவர்ச்சி கன்னி ஷகிலா. ஆரம்ப காலத்தில் ஆபாச படங்களில் நடித்து வந்த ஷகிலா, அதன் பின்னர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். குணச்சித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.
இவர் தமிழில் ஜெயம், தூள், வாத்தியார், பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். மேலும் தமிழில் யூடியூப் சேனலுக்காக பல பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷகிலா தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், என்னுடைய அம்மா உடல்நலக்குறைவால் இருந்தார். நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அப்போது டாக்டர் எழுதிய எழுத்துக்கள் சரியாக புரியாததால் அதுபற்றி அவரிடம் கேட்டேன்.
என்பக்கத்தில் திடீரென வந்து, தொடக்கூடாத இடத்தைத் தொட்டார். எதையும் யோசிக்காமல், டாக்டரை அறைந்து கடுமையாக திட்டினேன். எனது சத்தம் கேட்டு வெளியில் இருந்த நர்ஸ் வந்து என்னை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். அனைத்து ஏரியாக்களிலும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்னைகள் உள்ளன என கூறினார்.