‘எதிர் நீச்சல்’ சீரியலில் நடிகராக களமிறங்கும் இயக்குநர்..! 

 
Thiruselvam

‘எதிர்நீச்சல்’ சீரியலில் மீண்டும் நடிகராக இயக்குநர் திருச்செல்வம் களமிறங்கிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2002 முதல் 2005 வரை சன் டிவியில் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ தொடர் மூலம் நடிகராக அறிமுகமானவர் திருச்செல்வம். மேலும் இந்த தொடரின் இணை இயக்குநராக பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து, கோலங்கள், அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியுள்ளார்.

Ethir Neechal

நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர் நீச்சல்’ தொடரை இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட தொடர். தற்போது சீரியல் சூடு பிடித்து சென்று கொண்டிருக்கின்றது. அடுத்து என்ன நடக்கும்? சென்று ஆர்வத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது சீரியலில் பட்டம்மா பாட்டி கோமா நிலையில் இருக்கிறார். அருண் கௌதமுடன் பாதுகாப்பாக இருக்கிறார். இன்னொரு பக்கம் குணசேகரன் தன் தங்கை திருமணத்தை எப்படியாவது நடத்த தன் என்று எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார். இவர்களுடைய எண்ணத்தை முறியடித்து ஆதிரை- அருணின் திருமணம் நடக்குமா? கரிகாலனின் நிலைமை என்ன? என்ற பல அதிரடித்திருப்புகளுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இயக்குனர் சீரியலில் நடிக்கும் தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

Ethir Neechal

சீரியலில் ஜீவானந்தம் வருகைக்காக பலரும் காத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் இயக்குநர் திருச்செல்வம் சீரியலில் நடிக்க இருக்கிறார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கிறார். மேலும், இது குறித்து சீரியலுக்கு நெருக்கமான நபர் ஒருவர் கூறியிருப்பது, ஜீவானந்தம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் தான் திருச்செல்வம் நடிக்கிறார். விரைவில் அவர் சீரியலில் வருவார். அவருடைய வருகை மூலம் பார்வையாளர்கள் நிகழ்ச்சியை அதிக சுவாரசியத்தோடு பார்ப்பார்கள் என்று கூறியிருந்தார்.

From around the web