கூல்டிரிங்ஸில் போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ய நினைத்த இயக்குநர்.. பாலிவுட் நடிகை பரபரப்பு புகார்!

 
Ratan Rajput

போதை மருந்து கொடுத்து இயக்குநர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் முயன்றதாக நடிகை ரத்தன் ராஜ்புத் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

2006-ல் ஒளிப்பரப்பான ராவணன் என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானவர் ரத்தன் ராஜ்புத். இவர், ஒரு சில இந்தி படங்களிலும், பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். ஒரு சேனலுக்கு நேர்காணல் அளித்த போது அந்த மோசமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.

Ratan Rajput

அவர் பேசுகையில் நான் ஒரு படத்தில் நடிக்க நடிகைக்கான தேர்வு நடப்பதை அறிந்தேன். இதையடுத்து நடிகை தேர்வு நடப்பதாக சொல்லப்பட்ட ஓஷிவாரா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றேன். என் ஆண் நண்பரும் உடன் வந்தார். எனக்கு ஒரு சிசுவேஷன் கூறப்பட்டது. அதற்கேற்ப நடிக்குமாறு அங்கிருந்த இயக்குநர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் கூறினார். நானும் நடித்தேன், அவரும் நான் நன்றாக நடித்தேன் என பாராட்டினார்.

பின்னர் எனக்கு குளிர்பானம் கொடுத்தார். நான் ஒரு சிப் குடித்த போதே நான் அசவுகரியமாக இருப்பதை உணர்ந்து கொண்டேன். உடனே குளிர்பானத்தில் போதை பொருளை கலந்து இருக்கிறார்கள் என்பதை அறிந்தேன். பின்னர் என்னை இன்னொரு அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு எல்லா இடங்களிலும் துணிகள் வீசப்பட்டு கிடந்தன.

Ratan Rajput

அங்கு ஒரு பெண் குடிபோதையில் மயங்கி கிடப்பதை பார்த்தேன். அங்கிருந்த ஒருவன் எதற்காக பாய் பிரண்ட்டை எல்லாம் இங்கு அழைத்து வருகிறீர்கள் என சப்தம் போட்டார். உடனே அந்த இடத்தில் ஏதோ தப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து அங்கிருந்து என் நண்பரை அழைத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டேன் என தனக்கு நடக்கவிருந்த மோசமான அனுபவத்தில் இருந்து தான் எப்படி தப்பினேன் என்பதை அவர் விளக்கியுள்ளார்.

From around the web