அடுத்த படம் குறித்து பகீர் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி இயக்குநர்!!

 
Sudipto Sen

என் அடுத்த படம் இதுதான் என தி கேரளா ஸ்டோரி இயக்குநர் சுதிப்டோ சென் தெரிவித்துள்ளார்.

விபுல் ஷா தயாரிப்பில சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்தப் படத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் திரைப்படம் கடந்த மே மாதம் 5-ம் தேதி வெளியாகி பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. 

சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் படத்துக்கு வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்தப் படம் திரையிடப்படாது என தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் இந்தப் படம் தடைசெய்யப்பட்டது.

Kerala story

இதன் ஒரு பகுதியாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இதனிடையே, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில், 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாக தவறான தகவல் இடம்பெற்று இருப்பதாக மேற்கு வங்க அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஒப்புக்கொள்ளும் வகையில், 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டதற்கு உரிய ஆதாரம் இல்லை என்று படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலும் கூறப்பட்டது. இது புனையப்பட்ட கதை என்றும் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், திரைப்படம் தொடங்கும்போது, இது புனையப்பட்ட கதை என்பதை குறிப்பிடுமாறு உத்தரவிட்டனர்.

Maoists

சர்ச்சைகளுக்கு நடுவிலும் இந்தப் படம் நாடு முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. 30 கோடி பொருட் செலவில் உருவான இந்தப் படம் இந்திய அளவில் இதுவரை ரூ.200 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் அடுத்ததாக இந்தியாவில் 50 ஆண்டுகளாக இயங்கிவரும் மாவோயிஸ்டகள் பற்றி படம் இயக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தையும் தி கேரளா ஸ்டோரி விபுல் ஷா தயாரிக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

From around the web