கங்குவா படத்தை தவறாகப் பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர்.. வைரல் வீடியோ!

 
Kanguva

கங்குவா படத்தை ஏன் தவறா சொல்றாங்கன்னே தெரியல என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ‘கங்குவா’. மாபெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கும் கங்குவா படத்தை ஸ்டுடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா, யுவி கிரியேஷன்ஸ் வம்சி புரோமோத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தொகுப்பை நிஷாத் யூசுப் கவனித்து வருகிறார். இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.

Kanguva

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 11,500 திரையரங்குகளில் கடந்த 14-ம் தேதி வெளியானது. மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அதாவது பழங்குடியின மக்களில் ஒருவனாகவும், மற்றொன்றில் ஸ்டைலிஷான தோற்றத்திலும் நடித்திருக்கிறார்.

படத்தில் அதீத சத்தம், 3டி காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் உள்ளிட்டவை குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இப்படத்தில் நடித்த சூர்யாவை பலர் விமர்சித்து வரும் நிலையில், நடிகை ஜோதிகா மற்றும் சீனு ராமசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குழந்தைகளுடன் படத்தை பார்த்த இயக்குநர் சுசீந்திரன் படத்தை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், “நேற்று மாலை என் குழந்தைகளுடன் ‘கங்குவா’ திரைப்படத்தைப் பார்த்தேன், தமிழ் சினிமாவில் மிகவும் நேர்த்தியான பிரம்மாண்டமான திரைப்படம் இது, ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்துள்ளார் சிவா இயக்குநர் அவர்கள், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள், சூர்யா சாரின் நடிப்பு, உழைப்பு பிரமிக்க வைக்கிறது. அனைத்து துறைகளிலும் உலகத் தரத்துக்குத் தமிழில் இந்த கங்குவா, தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள், காலம் தாழ்த்தி கொண்டாடி விடாதீர்கள், அனைவரும் குடும்பத்துடன் சென்று இந்த திரைப்படத்தைப் பாருங்கள் ‘கங்குவா’ உங்களை மகிழ்விப்பான்” என்று தெரிவித்துள்ளார்.

From around the web