‘தி கோட்’ வெற்றி விழா.. கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஜய்.. வைரல் வீடியோ!

 
GoAT

‘தி கோட்’ படத்தின் வெற்றியை நடிகர் விஜய் கேக் வெட்டி கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ‘தி கோட்’ திரைப்படம், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இதில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

GOAT

இந்த படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தில் திரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்த்திருந்தார். 

ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்தது. இதுவரை ‘தி கோட்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.455 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இந்த நிலையில், ‘தி கோட்’ திரைப்படத்தின் வெற்றியை நடிகர் விஜய், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

From around the web