ரத்தம் தெறிக்க தெறிக்க.. வெளியானது ‘ரத்னம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

 
Ratnam

நடிகர் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரத்னம’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஷால் நடிப்பில் கடைசியாக ‘மார்க் ஆண்டனி’ படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. விஷாலுடன் எஸ்ஜே சூர்யாவும் நடித்திருந்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஹரியுடன் இணைந்தார் விஷால்.

Vishal 34

தாமிரபரணி, பூஜை என ஏற்கனவே இரண்டு படங்களில் விஷால் - ஹரி கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களுமே விஷால் ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் ட்ரீட்டாக அமைந்தது. இப்போது அதனைவிடவும் தரமான ஆக்‌ஷன் விருந்து படைக்க இந்த காம்போ ரெடியாகியுள்ளது. தற்போது வெளியான டைட்டில் டீசரில் இதனை உறுதி செய்துள்ளார் ஹரி.

‘விஷால் 34’ என தொடங்கிய இந்தப் படத்தின் டைட்டில் ‘ரத்னம்’ என படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து தற்போது வெளியான டைட்டில் டீசரில், லாரியில் வந்து இறங்கும் விஷால், வில்லன் ஒருவரின் தலையை வெட்டி கையில் கேட்ச் பிடிக்கிறார். ரத்தம் தெறிக்க தெறிக்க, படத்தின் டைட்டில் ‘ரத்னம்’ என அறிவிக்கப்படுகிறது. மேலும் இந்தப் படம் அடுத்தாண்டு சம்மரில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் விஷாலுடன் ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, கெளம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாந்த் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். விஷால் - தேவி ஸ்ரீ பிரசாத் இணையும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. விஷால் 34 டைட்டில் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், வன்முறை காட்சிகளை ஜீரணிக்க முடியவில்லை என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

From around the web