அந்த மனசு தான் Sir கடவுள்.. பாராட்டு மழையில் சித்தி இத்னானி!!

 
Siddhi_Idnani

மும்பையில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகள் பள்ளிக்கு சென்று, அவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான உபகரணங்களை நடிகை சித்தி இத்னானி வழங்கினார்.

2016-ல் வெளியான ‘கிராண்ட் ஹாலி’ படத்தின் மூலம் குஜராத் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சித்தி இத்னானி. தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் அறிமுகமாகனார். முதல் படத்திலேயே அவர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

Siddhi_Idnani

அதன்பின், இந்தியில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் ஒருவராக நடித்து இருந்தார். தொடர்ந்து ஆர்யாவிற்கு ஜோடியாக இவர் நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இவர் நடிப்பது மட்டுமில்லாமல் சமூக சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது ஆதரவற்றோர்களை சந்தித்து உதவி வழங்கி வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் மனநலம் குன்றிய பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வழங்கி அவர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளார்.


இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள சித்தி இத்னானி, “நீங்கள் ஒருவருக்கு பரிசளிக்கக்கூடிய சிறந்த விஷயம் உங்கள் நேரம். லிட்டில் ஏஞ்சல்ஸில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகளுடன் எனது மதியத்தை செலவிட்டேன். அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை விலைமதிப்பற்றது” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு 'என்ன மனசுப்பா' என்று ரசிகர்கள் வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web