தளபதி 69 படம்.. உதவி இயக்குனர்களை அலர்ட் செய்த எச்.வினோத்..!
விஜய்யின் கடைசி படமான ‘தளபதி 69’ திரைப்படத்தை எச்.வினோத் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அநேகமாக ஏப்ரல் முதல் வாரத்திற்குள் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘கோட்’ படத்தை வெளியிடவும் படக்குழு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கிய விஜய், தளபதி 69 படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் தளபதி 69 படத்தை இயக்கப்போவது யார் என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். ஒருநாள் வெற்றிமாறன் தான் தளபதி 69 படத்தை இயக்கப்போகின்றார் என தகவல்கள் வர மறுநாள் அட்லி இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இயக்குனர்களின் பெயர்கள் தளபதி 69 படத்திற்காக அடிபட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது கிட்டத்தட்ட தளபதி 69 திரைப்படத்தை வெற்றிமாறன் அல்லது வினோத் ஆகியோரில் ஒருவர் தான் இயக்கப்போகின்றனர் என தெரிகின்றது. அநேகமாக வினோத் தளபதி 69 படத்தை இயக்க 99 சதவீதம் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்த நிலையில் துணிவு படத்திற்கு பிறகு வினோத் கமலை வைத்து ஒரு படத்தை இயக்க தயாரானார். அப்படத்தை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது. ஆனால் அதன் பிறகு அப்படம் கைவிடப்பட்டதாகவும், வினோத் அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் திடீரென வினோத்திற்கு விஜய்யின் கடைசி படத்தை இயக்க வாய்ப்பு வந்ததாகவும், அதற்கான கதையை தீவிரமாக வினோத் தயார் செய்து வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் வினோத் தன் உதவி இயக்குனர்களை உஷார் செய்துள்ளாராம். தளபதி 69 திரைப்படம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஒருவேளை தளபதி 69 வாய்ப்பு தவறிப்போனால் தனுஷை வைத்து தான் அடுத்த படத்தை இயக்கவுள்ளேன். எனவே எதற்கும் இரண்டு படத்திற்கும் தயாராக இருங்கள் என தன் உதவி இயக்குனர்களை வினோத் உஷார்படுத்தியதாக ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது.
எனவே இறுதி முடிவு விஜய்யின் கையிலேயே இருக்கின்றது. விரைவில் விஜய் தளபதி 69 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.