‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு.. தாய்லாந்து புறப்பட்டார் நடிகர் விஜய்.. வைரலாகும் வீடியோ!

நடிகர் விஜய் ‘தளபதி 68’ படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்து புறப்பட்டு சென்றார்.
‘லியோ’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னையில் இளம் விஜய் நடிக்கும் காட்சி மற்றும் பாடல்கள் படமாக்கப்பட்டன. இதை முடித்துக் கொண்டு தற்போது தாய்லாந்தில் சில காட்சிகளை எடுக்க படக் குழுவினர் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் விஜய் 68 திரைப்படம் டைம் டிராவல் கதையை மயமாகக் கொண்டு எடுப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அதற்காகத்தான் விஜய் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருக்கிறார். அதில் டைம் டிராவல் மூலம் காலம் கடந்து செல்லும்போது இளமையான விஜய் தோன்றுவதற்காக அதிநவீன ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இதற்காக அமெரிக்கா சென்று ஸ்கேனிங் ப்ராசஸில் விஜய் ஈடுபட்டு சென்னை திரும்பினார். அதற்குப் பிறகுதான் அந்த படப்பிடிப்பு தொடங்கியது. டைம் டிராவல் வகையில் எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில் 50 மற்றும் 25 வயது தோற்றங்களில் விஜய் நடிக்கிறார். அதில் தற்போது இளம் விஜயின் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
#PTPrime | தளபதி 68 படப்பிடிப்புக்காக, மீண்டும் பாங்காக் புறப்பட்டார் நடிகர் விஜய்!#ActorVijay | #Airport | #Bangkok | #Thalapathy68 pic.twitter.com/7W3bNsRlp6
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) November 3, 2023
இந்த நிலையில், தளபதி 68 படக்குழு கடந்த 31-ம் தேதி அன்று தாய்லாந்து நாட்டிற்கு புறப்பட்டு சென்றது. லியோ படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற காரணத்தால் படப்பிடிப்பிற்காக விஜய் தாய்லாந்து செல்லவில்லை படக்குழு மட்டும் அங்கு சென்றது. வெற்றி விழா நிறைவடைந்ததை அடுத்து இன்று காலை 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து புறப்பட்டார்.