வெளியானது ‘தளபதி 68’ படத்தின் பூஜை வீடியோ.. விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

 
Thalapathy 68

விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படம் உலகம் முழுவதும் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Thalapathy 68

இந்த படம் குறித்த அப்டேட்களை ரசிகர்கள் கேட்க துவங்கி விட்ட நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்து உள்ளது. அந்த வகையில், இன்று (அக்டோபர் 24) முதல் ‘தளபதி 68’ தொடர்பான அப்டேட்கள் வெளியாகும் என்று ஏஜிஎஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று விஜயதசமி நாளில் படத்தின் பூஜை நடத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.


முதல்கட்டமாக ‘தளபதி 68’ பாடல் காட்சி ஒன்று எடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷனாக தான் இருக்க போகிறது என்று சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

From around the web