தமிழில் நடிக்கும் தல தோனி.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

 
LGM

தோனி எண்டர்டைன்மண்ட் தயாரித்துள்ள ‘எல்ஜிஎம்’ படத்தில் தோனி நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிரிக்கெட்டின் கூல் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி அவ்வப்போது விவசாயம், ராணுவத்தினருடன் பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி தோனி படத் தயாரிப்பில் களமிறங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

LGM

அந்த வகையில் தோனி என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “Lets Get Married” என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் இளம் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வரும் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக லவ் டுடே படத்தின் மூலம் இளைஞர்களை கவர்ந்த இவானா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் 80’ஸ் நாயகி நதியாவும், ட்ரெண்டிங் காமெடி நடிகர் யோகி பாபு என பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

தமிழில் விட்னெஸ், தெலுங்கில் அஹம் பிரம்மாஸ்மி படங்களை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இப்படத்தை இயக்க, அவரே படத்திற்கும் இசையும் அமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 10-ம் தேதி சென்னையில் நடந்தது. இதில் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி கலந்து கொண்டனர்.

MSD - Yogibabu

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய சஸ்பென்ஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் தோனி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து திரையில் தோனியை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.

From around the web