விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை... பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படமே ஓடிடியில் ரிலீஸ்!!

 
Mumbaikar

விஜய் சேதுபதி நடித்த முதல் இந்தி படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

2004 முதல் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, 2012-ல் வெளியான ‘சுந்தர பாண்டியன்’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பீட்சா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Mumbaikar

தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் வில்லானாக நடித்து வருகிறார். இதனிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் ஆகி உள்ளது. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் முனீஷ்காந்த் நடித்த வேடத்தில் தான் இந்தியில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கிற்கு மும்பைக்கர் என பெயரிடப்பட்டு உள்ளது. கடந்தாண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில், தற்போது அப்படத்தின் டிரெய்லரும் ரிலீஸ் தேதியும் வெளியாகி உள்ளன. அதன்படி இப்படம் வருகிற ஜூன் 2-ம் தேதி நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியில் இதற்கு முன் விஜய் சேதுபதி ஃபர்சி என்கிற வெப் தொடரில் நடித்திருந்தார். அந்த வெப் தொடர் ஓடிடியில் வெளியான நிலையில், தற்போது அவர் இந்தியில் நடித்துள்ள முதல் திரைப்படமான மும்பைகாரும் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநகரம் தவிர லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படமும் இந்தியில் போலா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

From around the web