தளபதி விஜய்யின் 68வது படத்தை இயக்கும் தெலுங்கு இயக்குநர்.? லேட்டஸ்ட் அப்டேட்!!

 
Vijay

நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தை தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் இயக்குவது உறுதியாகியுள்ளதாக சினிமா வட்டாரங்களில்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

‘வாரிசு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Leo

இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முக்கிய சண்டைக்காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்தப் படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய திரைப்படத்தின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் நடிக்கும் 68 வது திரைப்படத்தை ஆர்.பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. மேலும் அந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் இயக்குவார் என கூறப்படுகிறது.

Ramesh Vijay Jeeva

மேலும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் எனவும், அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு முன்னிட்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.  இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிட்டன. விஜய் தற்போது நடித்து வரும் லியோ திரைப்படம் இந்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகைக்கு வெளியாகிறது.

இந்த நிலையில் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய திரைப்படத்தை புத்தாண்டு பண்டிகைக்கு வெளியிடுகின்றனர். மேலும் அடுத்த ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு இரண்டு ட்ரீட் இருக்கலாம் என சினிமா துறையில் கூறுகின்றனர்.

From around the web