விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. உயிர் பிழைத்தேன் என பதிவிட்ட ராஷ்மிகா.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Rashmika

மரணத்திலிருந்து தப்பித்ததாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2016-ல் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் மிகுந்த பிரபலமடைந்தார். 2021-ல் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ‘புஷ்பா’ படத்திலும் நடித்துள்ளார்.

Rashmika

துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘சீதாராமம்’ படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். இவரது நடிப்பில் அனிமல் என்ற இந்தி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா நேற்று மும்பையில் இருந்து ஐதராபாத்திற்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். UK531 என்ற அவர் புறப்பட்ட விமானத்தில் பிரபல நடிகை ஷ்ரத்தா தாஸும் உடன் இருந்தார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தை மீண்டும் மும்பையில் தரையிறக்குவதுதான் பயணிகளின் உயிருக்கு நல்லது என்பதை முடிவு செய்த பைலட்டுகள், விமானத்தை பத்திரமாக சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கினர்.

Rashmika

பைலட்டுகளின் சமயோஜித நடவடிக்கையால் விஸ்தாரா விமானத்திற்குள் இருந்தவர்களின் உயிர் பாதுகாக்கப்பட்டது. இந்த விபரங்களை அறிந்த ராஷ்மிகா மந்தனா, உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மரணத்திலிருந்து தப்பித்தேன் என்று ஸ்ரத்தா தாஸுடன் எடுத்த செல்ஃபியை பகிர்ந்திருந்தார். இந்த பதிவு சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் ஐதராபாத்திற்கு பயணம் செல்வதற்காக மாற்று விமானத்தை விமான நிறுவனம் ஏற்பாடு செய்தது.

From around the web