முத்த கொள்கை தவிர்த்த தமன்னா... யாருக்காக தெரியுமா?

 
Tamannah

நடிகை தமன்னா தனது காதலர் விஜய் வர்மாவிற்காக தனது கொள்கையை தமன்னா கொஞ்சம் தளர்த்தியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. 2006-ல் வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தமன்னா அறிமுகமானார். தனது முதல் படத்தில் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஓரளவுக்கு ஈர்த்த தமன்னா, தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து வெளியானாலும் ரசிகர்களின் கவனத்தை பெருமளவு ஈர்க்க தவறிவிட்டது. அதன் பின்னர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘படிக்காதவன்’ படத்தில் தனுசுக்கு ஜோடியாக தமன்னா களம் இறங்க இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டானது. 

குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த தமன்னா கார்த்தி நடித்த சிறுத்தை திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி நடிக்க ரசிகர்கள் கூட்டம் மளமளவென பெறுகத் தொடங்கியது. அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் அங்கும் இங்கும் கவர்ச்சி காட்டி நடிக்க தொடங்கிய தமன்னா, தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகைகளில் ஒருவராகிவிட்டார்.

Tamannah

அஜித், விஜய், கார்த்தி என்று டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிக்க தொடங்கிய தமன்னா, தற்போது இந்தி சினிமாவில் செம பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தமன்னா நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமன்னா முக்கிய வேடத்தில் நடித்துள்ள லஸ்ட் ஸ்டோரிஸ் 2 பட டீசர் வெளியாகியிருந்தது.

4 வித்தியாசமான கதைகளை படமாக கொண்ட ஆந்தாலஜி படம்தான் லஸ்ட் ஸ்டோரீஸ். இதன் முதல் பாகம் 2018-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற பல முன்னனி பாலிவுட் நட்சத்திரங்களை கொண்டு தயாராகி வருகிறது. பாலியல் உறவு குறித்த இந்திய பெண்களின் புரிதலை 4 கோணங்களில் இருந்து சொல்வதுதான் படத்தின் கதை.

லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் மொத்தம் நான்கு கதைகள் உள்ளன. அதில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பாலிவுட் இயக்குநர்கள் இயக்குகிறார்கள். ஜோயா அக்தர், கரண் ஜோஹர், அனுராக் கஷ்யப் மற்றும் திபாகர் பேனர்ஜீ ஆகிய நான்கு பேர்தான் இந்த படத்தின் இயக்குநர்கள். இந்தப் படத்தில் பிரபல நடிகைகளான கஜோல், தமன்னா, மிருணாள் தாகூர் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் திறமையான நடிகர்களான நீனா குப்தா, அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி, கஜோல், குமுத் மிஸ்ரா மற்றும் தில்லோடமா ஷோம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

Tamannah

இந்தப் படத்தில் விஜய் வர்மாவும் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே தமன்னாவும் விஜய் வர்மாவும் காதலிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அவருக்காக தமன்னா முத்தக்காட்சியில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. விளம்பரத்திற்காக தமன்னா இது போன்ற காட்சிகளில் நடிக்கிறார் என சிலர் விமர்சனம் செய்துள்ளனர். அவர்களுக்கு தமன்னா விளக்கம் அளித்துள்ளார்.

18 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் தனக்கு இது போன்ற காரியங்களால் விளம்பரம் தேவையில்லை என்று காட்டமாக தனது விளக்கத்தை அளித்துள்ளார் தமன்னா. கடந்த சில தினங்களுக்கு முன்பு லஸ்ட் ஸ்டோரி-2 திரைப்படத்தின் டீசர் நெட்ஃபிளிக்சில் வெளியானது. அந்த டீசரே படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. கவர்ச்சியே காட்டாத தமன்னா இந்தப் படத்தில் கவர்ச்சியில் பின்னி பெடலெடுத்திக்கிறார் எனத் தெரிகிறது. அதனால் வரும் ஜூன் 29-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறார்கள்.

From around the web