‘தளபதி 68’ மாஸ் அப்டேட்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

 
Thalapathy 86

நடிகர் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 68’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

‘வாரிசு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Venkat prabhu Vijay Yuvan

இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முக்கிய சண்டைக்காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்தப் படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்க உள்ளார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அதில் 4 இயக்குனர்களின் பெயர் இணையத்தளத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புதுவித காம்போவாக இருக்க போகிறது, பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது.


இதுகுறித்து விஜய் தனது ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், யுவன்சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி பார்த்தால், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் சொந்தக்காரர்களான கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தளபதி விஜய்யுடன் இணையும் 25வது தயாரிப்பு முயற்சி ஆகும். இப்போது, ‘பிகில்’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட், தளபதி விஜய்யுடன் 2வது முறையாக இணைந்துள்ளனர். படத்திற்கான தலைப்பு அறிவிப்புடன் நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

From around the web