சூர்யாவின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரஜினி படத்துடன் போட்டியிடும் சூர்யா!

 
Kanguva - Vettaiyan Kanguva - Vettaiyan

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. மாபெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொள்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

Kanguva

கங்குவா படத்தின் டீசர் கடந்த மாதம்  வெளியாகியது. வெளியான குறுகிய நேரத்தில் பலக் கோடி பார்வைகளை பெற்றது. டீசரில் சூர்யா மிக அற்புதமாக நடித்து இருப்பார். படத்தை 10 மொழிகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின்  மீது ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. 

இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுக்குறித்து படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டரில் மனித பிணங்கள் மலைப் போல குவித்து வைக்கப்பட்டுள்ளது அதன் மேல் சூர்யா ஒரு வாழ் ஏந்தியப் படி காணப்படுகிறார்.


அக்டோபர் 10-ம் தேதி ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன்  திரைப்படமும் வெளியாகவுள்ளது. அதே நாளில் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் வெளியாக உள்ளதால் மிகப்பெரிய போட்டி இந்த இரண்டு படங்களிடையே உருவாகப்போவது உறுதி. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சூர்யா தற்பொழுது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா44 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

From around the web