பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு வில்லனாக களமிறங்கும் சூர்யா? தூம் 4 படம் பற்றி கசிந்த தகவல்
ஷாருக்கான் நடிக்கவுள்ள ‘தூம் 4’ படத்தில் நடிகர் சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2004-ல் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன், ஹிரித்திக் ரோஷன், ரிமி சென், உதய் சோப்ரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘தூம்’. இதன் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி கவனம் பெற்றன.
கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு தூம் 3 வெளியானது. இதில், அபிஷேக் பச்சன், அமீர்கான், உதய் சோப்ரா, கத்ரினா கைப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது இதன் 4-வது பாகத்தை உருவாக்க படக்குழு மும்முரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் தமிழ் நடிகர் சூர்யா இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ‘தூம் 4’ படத்தில் வில்லனாக நடிக்க அவரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாய்ப்பை சூர்யா ஒப்புக்கொண்டால், தூம் 4 அவரது இரண்டாவது பாலிவுட் படமாக அமையும். இதற்கு முன்பு அக்சய் குமார் மற்றும் சுதா கொங்கரா நடிப்பில் வெளிவந்த ‘சர்பிரா’ என்ற படத்தில் கேமியோ ரோலில் சூர்யா தோன்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.