சூர்யா - துல்கர் சல்மான் நடிக்கும் ‘சூர்யா 43’ படத்தின் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!!

 
Suriya 43

நடிகர் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 43’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது, இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான கங்குவா படத்தின் அறிவிப்பு வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

Suriya 43

இதற்கிடையே சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் சூர்யா மீண்டும் ஒரு படத்தில் நடிப்பார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த படத்தின் அறிவிப்பை இன்று தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்ட்மென்ட் அதிரடியாக இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது அவருக்கு 100வது படமாக அமைகிறது. படத்தின் தலைப்பு முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால் புறநானூறு என்ற ஹின்ட் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. சூர்யா 43 என்ற ஒர்க்கிங் டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.


இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதனை கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

From around the web